போலீஸ் ஸ்டேஷனில் ஐ.ஜி., திடீர் ஆய்வு
ஈரோடு: தமிழகம் முழுவதும் சிறந்த போலீஸ் ஸ்டேஷன் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு போலீஸ் சப்-டிவிசனில் சூரம்பட்டி ஸ்டேஷனை, எஸ்.பி., ஜவகர் தேர்வு செய்து தலைமைக்கு பரிந்துரைத்தார். தேர்வு குழுவினர் ஸ்டேஷனில் ஆய்வு செய்த நிலையில், அமலாக்கத்துறை ஐ.ஜி., மயில்வாகனன், சூரம்பட்டி ஸ்டேஷனில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஸ்டேஷனின் சுற்றுப்புறத்தில் குற்ற வழக்கு தொடர்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை, அதற்குண்டான நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்த அறிவுறுத்தினார். பின் எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., ஜவகர் முன்னிலையில் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.