உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தல்

குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தல்

ஈரோடு: ரோடு மாவட்ட மருத்துவத்துறை பணியாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.,) தலைவர் சின்னசாமி, பெருந்துறை மருத்துவ கல்லுாரி முதல்வர் செந்தில்குமாருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பெருந்துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லுாரியில் ஒப்பந்த பணியாளர்களுக்கு, ஒப்பந்தப்படி வழங்கப்பட வேண்டிய, மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை.கலெக்டர் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமான, 562 ரூபாயை, முன் தேதியிட்டு அமலாக்க வேண்டும். அனைத்து ஒப்பந்த பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் வார விடுமுறை வழங்க வேண்டும். தேசிய, பண்டிகை விடுமுறை நாட்கள் சட்டப்படி ஆண்டுக்கு ஒன்பது நாட்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். மருத்துவமனையில் அதிகரிக்கப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கைக்கேற்ப, கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை