மேலும் செய்திகள்
சாதனை பெண் குழந்தைகள் பரிசுக்கு விண்ணப்பிக்கலாம்
04-Sep-2024
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும், 18 வயது வரை கல்வி கற்-றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழி-லாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும், வீர தீர செயல் புரிந்த, 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைக-ளுக்கு விருது வழங்கப்படுகிறது.தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜன., 24ல் விருதுடன் பாராட்டு பத்திரமும், 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்படும். நடப்பாண்டுக்கான விருது, பரிசு தொகை பெற, 13 முதல், 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள், தமிழக அரசின் விருதுக்கான இணைய தளம், https://awards.tn.gov.inல் வரும், 30க்குள் விண்ணப்-பிக்க வேண்டும்.கூடுதல் விபரத்தை, ஈரோடு கலெக்டர் அலுவ-லகம், ஆறாவது தளத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெறலாம்.
04-Sep-2024