உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கர்நாடக மாநில மது வைத்திருந்தவர் கைது

கர்நாடக மாநில மது வைத்திருந்தவர் கைது

தாளவாடி: தாளவாடி போலீசார் தாளவாடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் வந்த, தாளவாடி அருகேயுள்ள ஓசூரை சேர்ந்த சித்துராஜ், 25, என்பவரிடம், 144 பாக்கெட் கர்நாடகா மாநில மது பாக்கெட் இருந்தது. ஓசூர் பகுதியில் விற்க கொண்டு செல்வது தெரிந்தது. அவரை கைது செய்து, டூவீலருடன் மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.இதேபோல் தாளவாடி அருகே ஒசூரை சேர்ந்த ரங்கசாமி, 47, என்பவர் டூவீலரில் வந்தார். அவரிடம் சோதனை செய்ததில் பாறைகளை வெடிக்க செய்வதற்கான, ஜெலட்டின் வெடி மருந்து குச்சிகள், 39 இருந்தன. ஆனால், உரிய அனுமதி இல்லாததால், அவற்றை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை