மேலும் செய்திகள்
பழனி எலுமிச்சம் பழம் ரூ.5.09 லட்சத்துக்கு ஏலம்
15-Feb-2025
ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்கா நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டத்தில் இருந்து எலுமிச்சம் பழம் வரத்தாகிறது. நாட்டு எலுமிச்சை சுற்று வட்டார பகுதி மாவட்டங்களில் இருந்து வரத்தாகிறது.வழக்கமாக கோடை வெயில் அதிகரிக்கும் நிலையில், தேவை அதிகரித்து எலுமிச்சை விலை உயரும். தற்போதே கோடை போல் வெயில் வாட்டுவதால், எலுமிச்சம் பழத்தின் தேவை அதி-கரித்து வருகிறது. அதேநேரம் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்-துள்ளது. கடந்த வாரம் கிலோ, 30 ரூபாய்க்கு விற்ற நிலையில், 50 ரூபாயாக நேற்று உயர்ந்தது.டூவீலர் மோதி முதியவர் பலிகோபி, பிப். 15-கோபி அருகே ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர் அனந் பத்மநாதன், 75; கடந்த, 11ம் தேதி, கோபி-சத்தி சாலையில் தின-சரி காய்கறி மார்க்கெட் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்-போது கோபியை சேர்ந்த சுகுமார் ஓட்டி வந்த ஸ்பிளெண்டர் பைக் மோதியதில், பலத்த காயமடைந்தார். கோபி அரசு மருத்து-வமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து அவரின் தம்பி ஸ்ரீதர் புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்-றனர்.
15-Feb-2025