உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டி.என்.சி.எஸ்.சி., சுமை தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி போராட்டம் துவக்கம்

டி.என்.சி.எஸ்.சி., சுமை தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி போராட்டம் துவக்கம்

ஈரோடு:ஈரோடு, சேனாதிபாளையம் உணவு சேமிப்பு கிடங்கில் பணி செய்யும், தமிழ்நாடு சுமை துாக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் ராஜூ தலைமையில் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் துவங்கியது.அங்குள்ள மண்டல மேலாளர் அலுவலகத்தில் மனு வழங்கி, கூறியதாவது: சங்கத்துக்கான அங்கீகார தேர்தலை உடனே நடத்த வேண்டும். வருகை பதிவேட்டில் பெயர் சேர்ப்பதாக கூறி கடந்த ஆறு ஆண்டாக சேர்க்காமலும், குழு கூட்டத்தில் பதிவு செய்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால், தொழிலாளர் பெயர் இன்றி சுமைப்பணி செய்து வருவதை மாற்றி, உடன் பெயர் சேர்க்க வேண்டும்.கடந்த, 2025 ஜூலை 12 முதல் வழங்க வேண்டிய, 60 சதவீத கூலி உயர்வை முன் தேதியிட்டு வழங்க வேண்டும். 2022ம் ஆண்டுடன், 10 ஆண்டுகள் பணி முடித்த தொழிலாளர்களுக்கு பச்சை அட்டை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பல தொழிலாளர்களின் கோப்புகளை, பல மண்டலங்களில் இருந்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்பாமல் உள்ளதால், உடனடியாக கிடப்பில் உள்ள கோப்புகளை சரி செய்து ஓய்வூதியம் கிடைக்க செய்ய வேண்டும் என, வலியுறுத்தினர். நேற்று முதல் இரு தினங்களுக்கு காலையில் பணிக்கு வந்து, பணி செய்யாமல் காத்திருந்து போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை