மேலும் செய்திகள்
மேட்டூர் அணை நீர் இருப்பு சரிவு
30-Aug-2024
மேட்டூர்: நீர்வரத்து அதிகரிப்பால், நேற்று மேட்டூர் அணை நீர்மட்டம், 1 அடி, நீர் இருப்பு, 1 டி.எம்.சி., உயர்ந்தது.மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை அதிகரித்ததால் கடந்த, 31ல், 115.56 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் அதிகரிக்க துவங்கியது. கடந்த, 31ல், வினாடிக்கு, 6,396 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று முன்தினம், 19,199 கனஅடியாகவும், நேற்று, 22,601 கனஅடியாகவும் அதிகரித்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு, 13,500 கனஅடி நீர் திறக்கப்பட்டது.நீர் திறப்பை விட, வரத்து கூடுதலாக இருந்ததால் நேற்று முன்தினம், 115.82 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 116.27 அடியாகவும், 86.95 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு நேற்று, 87.64 டி.எம்.சி.,யாகவும் உயர்ந்தது
30-Aug-2024