உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேசிய வில்வித்தை போட்டி

தேசிய வில்வித்தை போட்டி

ஈரோடு: தேசிய அளவிலான வில்வித்தை போட்டி, சித்தோட்டில் நடந்தது. தமிழ்நாடு வில் விளையாட்டு சங்க பொது செயலாளர் மணிகண்டன், தொழில்நுட்ப இயக்குனர் மணிவாசகம் தொடங்கி வைத்தனர். மூன்று பிரிவுகளாக நடந்த போட்டியில், 8, 10, 12, 14, 17 வயதுக்குட்பட்டோர், 18 மற்றும் 35 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 300-க்கும் மேற்பட்ட வீரர்,- வீராங்கனைகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஈரோடு பிரகாஷ் எம்.பி., கொங்குநாடு மக்கள் கட்சி இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை