மேலும் செய்திகள்
தூய்மை பணியாளர் உள்பட 2 பேர் மாயம்
26-Sep-2026
சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை அடுத்த ராஜன் நகரை சேர்ந்தவர் மாதேஷ், 27; ஜே.சி.பி., ஆப்பரேட்டர். வடக்குப்பேட்டையில் வசித்தபடி வேலை செய்து வந்தார்.குடிப்பழக்கம் இருந்த நிலையில், நான்கு மாதங்களாக வலிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு அறையில் துாங்க சென்றவர் நேற்று காலை வெகு நேரமாகியும் திறக்கவில்லை. அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியே பார்த்தபோது, துாக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். தகவலின்படி சென்ற சத்தி போலீசார் உடலை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.* கோபி அருகேயுள்ள காசிபாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன், 45; ஜே.சி.பி., ஆப்பரேட்டர். சத்தி அருகே பெரியார்நகரில் மனைவியுடன் வசித்தார். குடிப்பழக்கத்தால் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாலும் மது குடிப்பதை நிறுத்தவில்லை. கடந்த, 4ம் தேதி சாணிப்பவுடரை குடித்து விட்டார். சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். இதுகுறித்து சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Sep-2026