உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 1.77 கோடி வேட்டி, 1.77 கோடி சேலை உற்பத்தி ரூ.100 கோடி ஒதுக்கீட்டுடன் அரசாணை வெளியீடு

1.77 கோடி வேட்டி, 1.77 கோடி சேலை உற்பத்தி ரூ.100 கோடி ஒதுக்கீட்டுடன் அரசாணை வெளியீடு

ஈரோடு:தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகைக்காக இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, தலா, 1.77 கோடி வேட்டி, சேலை உற்பத்திக்கு அரசாணை வெளியிட்டுள்ளனர்.இது குறித்து, கைத்தறித்துறை அரசு முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:வரும், 2025 பொங்கல் பண்டிகையின்போது இலவச வேட்டி, சேலை பயனாளிகளுக்கு வழங்குவதுடன், முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கும் வழங்கவும், நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இதன்படி, 1 கோடியே, 77 லட்சத்து, 64,476 சேலைகள், 1 கோடியே, 77 லட்சத்து, 22,995 வேட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.தரம் பரிசோதித்து, தேவை பட்டியல் அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.இலவச வேட்டி, சேலை உற்பத்திக்காக, 100 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு, கூடுதலாக தேவைப்படும் தொகை மீண்டும் வழங்கப்படும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுபற்றி, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தற்போது, 1 கோடியே, 77 லட்சத்து, 22,995 வேட்டிகள், 1 கோடியே, 77 லட்சத்து, 64,471 சேலைகள் உற்பத்தி செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. சில நாட்களில் நுால் வரத்தாகி, பணிகள் துவங்கும்.கடந்தாண்டைவிட நடப்பாண்டில், 77 லட்சம் வேட்டியும், 53 லட்சம் சேலையும் கூடுதலாக உற்பத்தி செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால், விசைத்தறியாளர்களுக்கு கூடுதலாக வேலையும், உற்பத்திக்கான வாய்ப்பும் கிடைத்துள்ளதால் அரசுக்கு நன்றி.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை