உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காலாண்டு தேர்வு 19ல் துவக்கம்

காலாண்டு தேர்வு 19ல் துவக்கம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு வரும், 19ம் தேதி தொடங்கவுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, 20ம் தேதி தொடங்குகிறது. பிளஸ் 1, பிளஸ் 2க்கு, 19ம் தேதி ஆரம்பமாகிறது. ஆறு, எட்டு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு காலையில், ௭, ௯, பிளஸ்௧க்கு மதியமும் தேர்வு நடக்கிறது. அனைத்து வகுப்புகளுக்கும், 27ல் நிறைவடைகிறது. 28ம் தேதி முதல் அக்., 2 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை துரத்தியஒற்றை யானையால் பீதிசத்தியமங்கலம்': தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் செல்லும் வழியில், நேற்று வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை சாலையில் உலா வந்தது. மண்ணை தலையில் அள்ளிப்போட்டுக்கொண்டு நடமாடியது. அப்போது டூவீலரில் வந்த சிலரை துரத்தியது. இதனால் வாகனங்களை திருப்பிக்கொண்டு அவர்கள் பறந்தனர். தகவலறிந்து யானையை விரட்ட, வேட்டை தடுப்பு காவலர்கள் சென்றனர். அவர்களையும் துரத்தியதால் ஓட்டம் பிடித்து தப்பினர். அரை மணி நேரத்துக்கும் மேலாக சாலையில் உலா வந்த யானை, வனப்பகுதிக்கு சென்ற பிறகே, வாகன ஓட்டிகள் பயணத்தை தொடர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி