மேலும் செய்திகள்
பவானி ஆற்றில் போலீஸ் அலர்ட்
09-Sep-2024
டி.என்.பாளையம்: கோபி--கள்ளிப்பட்டி சாலையில் பவானி ஆற்றின் குறுக்கே பாலம் அமைந்துள்ளது. அதன் அருகில் படித்துறை அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து மக்கள் கூறியதாவது: கள்ளிப்பட்டி, கொண்டையம் பாளையம், கணக்கம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இக்கோவில் திருவிழாக்களின்போது பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் வழக்கம் உள்ளது. இதில் கோபி -கள்ளிப்பட்டி சாலையில், பவானி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தின் அருகில், பவானி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வருகிறோம்.படித்துறை இல்லாததால் ஆற்றில் இறங்குவதில் சிரமம் உள்ளது. மழைக்காலங்களில் ஆற்றில் வழுக்கி விழும் சூழல் உள்ளது. எனவே இப்பகுதியில் படித்துறை அமைக்க வேண்டும். விநாயகர் சிலைகளை கரைப்பதற்கும் ஏதுவாக இருக்கும். இவ்வாறு கூறினர்.
09-Sep-2024