உடலுறுப்பு தானம் செய்தவருக்கு மரியாதை
உடலுறுப்பு தானம்செய்தவருக்கு மரியாதை ஈரோடு, ஈரோடு மாவட்டம் கஸ்பா வீரப்பன்சத்திரம், ஜான்சி நகர், குமரன் வீதியை சேர்ந்தவர் குமார். இவர் சாலை விபத்தில் இறந்தார். உடலுறுப்புகளை தானம் செய்வதாக பதிவு செய்து, குடும்பத்தார் அனுமதித்தனர். இதன்படி உடலுறுப்புக்கள் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் எடுத்துக் கொண்டது. தானம் செய்த குமார் உடலுக்கு, அரசு தரப்பில் ஈரோடு ஆர்.டி.ஓ., (பொறுப்பு) ராஜகோபால், தாசில்தார் முத்துகிருஷ்ணன் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர்.