புளியம்பட்டியில் போதை வஸ்து விற்பனை அமோகம் மாணவர்களை தேடி பொட்டலம் வினியோகம்
புளியம்பட்டி: மாணவர்கள் போதைக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக, பள்ளி மற்றும் கல்லுாரி அருகே, 100 அடி துாரத்துக்குள் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்கள், சிகரெட் உள்ளிட்டவை விற்பனை செய்யக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், புன்செய்புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் சுற்றுப்பகுதியில் போதை வஸ்துக்கள் விற்பனை அமோகமாக உள்ளது. இவை எளிதாக கிடைப்பதால், மாணவர்கள் புகை மற்றும் புகையிலை பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். சமீப காலமாக ஒரு சில இடங்களில் போதை சாக்லெட் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை உட்கொள்ளும் மாணவர்கள், தன்னிலை மறந்தவர்களாக சுற்றுகின்றனர். இத்துடன் புன்செய்புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் சுற்றுப் பகுதியில், கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவர்களை குறிவைத்து, வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இருசக்கர வாகனங்களில் வந்து கஞ்சா வினியோகிக்கின்றனர். கல்லுாரி மாணவர்களின் வசதிக்கேற்ப, அவர்கள் தங்கியுள்ள பகுதிக்கே சென்று, டோர் டெலிவரி செய்கின்றனர். குறிப்பாக புன்செய்புளியம்பட்டி காந்திநகர் மேல்பகுதியில் காலி இடம், சொலவனூர் மேடு உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை களை கட்டுகிறது. இதேபோல பல்வேறு இடங்களில், மாணவர்களை குறி வைத்து கஞ்சா வியாபாரம் நடக்கிறது. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு போதை பொருட்கள் விற்பனையை தடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.கொடிவேரி தடுப்பணை வெறிச்கோபி, செப். 16-கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு, விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், விடுமுறை தினமான நேற்று குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே வந்தனர். இதனால் தடுப்பணை வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. சுபமுகூர்த்த நாள் என்பதால், பயணிகள் வருகை குறைந்து விட்டதாக, நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவித்தனர்.