விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவன் சாவு
டி.என்.பாளையம், செப். 17- -டி.என்.பாளையம் அருகே, கார் மோதியதில் காயமடைந்த பள்ளி மாணவன் இறந்தான்.கள்ளிப்பட்டி அருகேயுள்ள கணக்கம்பாளையம், மேற்கு புது காலனியை சேர்ந்த அர்ஜுன் மகன் இளம்புகழ் வளவன் 12; கணக்கம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன். கடந்த, 15ம் தேதி காலை கள்ளிப்பட்டி -கோபி சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தான்.கோபி நோக்கி ஆத்து பாலம் அருகே நடந்து சென்றபோது, கள்ளிப்பட்டியை சேர்ந்த ஜீவா ஸ்டாலின் ஓட்டி வந்த மாருதி கார் சிறுவன் மீது மோதியது.துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில், கோபி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று இறந்தான். இதுகுறித்து பங்களாபுதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.