மேலும் செய்திகள்
கொடுமுடி அருகே சாலைப்பணி ஆய்வு
06-Aug-2024
ஈரோடு: பெருந்துறை அருகே, ஈரோடு சாலை, செட்டித்தோப்பு என்ற இடத்தில் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி குளமாகிறது. இதனால் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமப்பட்டனர். தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதையடுத்து நெடுஞ்சாலை துறை சார்பில் செட்டித்தோப்பு பகுதியில் பாலம் மற்றும் ஒரு கி.மீ., துாரத்துக்கு தார்சாலை அமைக்க, 6.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பணி நடந்து வருகிறது. இங்கு நடக்கும் பாலம் கட்டுமான பணி, தார்ச்சாலை அமைக்கும் பணியை திருப்பூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளர் சரவணன் ஆய்வு செய்தார்.
06-Aug-2024