1 எலுமிச்சம் பழம்ரூ.25 ஆயிரத்துக்குகோவிலில் ஏலம்
1 எலுமிச்சம் பழம்ரூ.25 ஆயிரத்துக்குகோவிலில் ஏலம்ஈரோடு:மொடக்குறிச்சி அருகே கந்தசாமிபாளையத்தில் சடையப்ப சுவாமி கோவிலில், சித்திரை திருவிழா நடந்தது. நடப்பாண்டு விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு கோவில் வளாகத்தில் சித்திரை கனி ஏலம் நடந்தது. இதில் சுவாமி பூஜையில் வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சம்பழம் ஏலம் விடப்பட்டது. பக்தர்கள் போட்டி போட்டு ஏலம் கூறினர். இறுதியில் கந்தசாமிபாளையத்தை சேர்ந்த ஒருவர், 25 ஆயிரம் ரூபாய்க்கு எடுத்தார்.