உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயம் அருகே வீட்டில் 10 பவுன் நகை திருட்டு

காங்கேயம் அருகே வீட்டில் 10 பவுன் நகை திருட்டு

காங்கேயம்: காங்கேயம் அருகே வாய்க்கால்மேடு, அன்னை சந்தியா நகரை சேர்ந்தவர் முகமது, 65; ஸ்டேசனரி கடைகளுக்கு பொருட்கள் வாங்கி விற்பனை செய்து வருகிறார். சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு மனைவியுடன் சென்றுள்ளார். இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டு மற்றும் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அப்பகுதி மக்கள் தகவலின்படி போலீசார் சென்றனர். முகமதுவுக்கும் தகவல் அளித்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, 10 பவுன் நகை மற்றும் 5,௦௦௦ ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. காங்கேயம் போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி