போக்குவரத்து விதி மீறல் 1,005 வழக்குகள் பதிவு
காங்கேயம், காங்கேயம் போக்குவரத்து போலீசார் நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். விதி மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிந்து அபராதம் விதிக்கின்றனர். இந்த வகையில் கடந்த மாதம், நகரில் பல்வேறு இடங்களில் நடத்திய வாகன சோதனையில், ௧,௦௦௫ வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம், ௧.௪௨ லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் லயோலா இன்னாசி மேரி தெரிவித்தார்.