மேலும் செய்திகள்
739 கிலோ கஞ்சா எரியூட்டி அழிப்பு
21-Jun-2025
ஈரோடு, ''ஈரோடு மாவட்டத்தில் 2019ல் இருந்து 2024 வரை கைப்பற்றப்பட்ட 1,100 கிலோ கஞ்சா கணக்கெடுக்கப்பட்டு விரைவில் அழிக்கப்படவுள்ளது,'' என, மதுவிலக்கு டி.எஸ்.பி., சண்முகம் தெரிவித்தார். இத குறித்து அவர் மேலும் கூறியதாவது:ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தில் மதுவிலக்கு பிரிவில் மாவட்டத்தின் பல இடங்களில் பிடிபட்ட கஞ்சா சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது. பவானி குற்றவியல் மாஜிஸ்திரேட், ஈரோடு குற்றவியல் மாஜிஸ்திரேட் கணக்கெடுப்பை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முன்னிலையில் கஞ்சா அனைத்தும் கணக்கெடுக்கப்பட்டு, பின்னர் மதுவிலக்கு பிரிவிடம் ஒப்படைக்கப்படும். கோவை டி.ஐ.ஜி., ஒப்புதல் பெற்றவுடன் கைப்பற்ற கஞ்சா தீயிட்டு அழிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
21-Jun-2025