மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் 14 மனு
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார். துணை மேயர் செல்வராஜ், துணை ஆணையர் தனலட்சுமி முன்னிலை வகித்தனர்.இதில் சாக்கடை, சாலை, தெருவிளக்கு, குடிநீர் பிரச்னை, வரி விதிப்பு பிரச்சனை, வேலை வாய்ப்பு தொடர்பாக, 14 பேர் மனு அளித்தனர்.