உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தெருநாய்கள் கடித்து 14 ஆடுகள் பலி

தெருநாய்கள் கடித்து 14 ஆடுகள் பலி

சென்னிமலை; சென்னிமலை யூனியன் எக்கட்டாம்பாளையம் ஊராட்சி தட்டாரவலசை சேர்ந்தவர் குணசேகரன் 45; நல்லபாழி பகுதியில் பட்டி அமைத்து, 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக காட்டில் திறந்து விட்டிருந்தார்.அப்போது வந்த ஏழு வெறிநாய்கள், ஆடுகளை துரத்தித் துரத்தி கடித்தன. இதில், 10 ஆடுகள் பலி-யாகி விட்டன. நான்கு ஆடுகள் படுகாயமடைந்து உயிருக்குப் போராடின. கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தும் இந்த நான்கு ஆடுகளும் இறந்து விட்டன. 14 ஆடுகளுக்கும் அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்க, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ