உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 1,410 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் 2 கடைகளுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்

1,410 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் 2 கடைகளுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்

ஈரோடு ஈரோடு மாநகராட்சி, 36வது வார்டு மணிக்கூண்டு அருகில், ஓட்டுக்காரர் சின்னய்யா வீதியில் செயல்படும் மொத்த வியாபார கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் விற்கப்படுவதாக புகார் போனது. இதன் அடிப்படையில் மாநகராட்சி சுகாதார அலுவலர் பூபாலன், ஆய்வாளர்கள் கண்ணன், சதீஸ்குமார், மணிவேல் அடங்கிய குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.இதில் உதாராமின் ஸ்ரீபவானி பிளாஸ்டிக்ஸ் கடையில், 700 கிலோ பிளாஸ்டிக் கவர்; ரமேஷின் மதிஷா ஏஜென்சியில், 710 கிலோ பறிமுதல் செய்தனர். இருவருக்கும் தலா, 25,000 ரூபாய் அபராதம் விதித்தனர். மீண்டும் பிளாஸ்டிக் கவர்களை விற்றால், கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை