உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 16,335 மதுபான பாட்டில்கள் பறிமுதல்; டி.எஸ்.பி., தகவல்

16,335 மதுபான பாட்டில்கள் பறிமுதல்; டி.எஸ்.பி., தகவல்

ஈரோடு, டிச. 26-இந்தாண்டில் நவம்பர் வரை, ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத, 16,335 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இந்தாண்டு ஜனவரி முதல் நவ.,இறுதி வரை பிடிபட்ட போதை பொருட்கள் குறித்து, டி.எஸ்.பி., சண்முகம் கூறியதாவது:சட்ட விரோத விற்பனையில் டாஸ்மாக் மது விற்றதாக, 1,307 வழக்குகள் பதிவு செய்து 1,318 பேர் கைது செய்யப்பட்டனர். கர்நாடகா மாநில மது விற்றதாக, 200 பேர் கைது செய்யப்பட்டனர். 16,335 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விஷ சாராயம் வைத்திருந்ததாக ஒன்பது வழக்குகளில், 15 பேர் கைது செய்யப்பட்டனர். 43 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது. சாராய ஊறல், 295 லிட்டர் அழிக்கப்பட்டது. மதுபான பாட்டில்கள் கடத்தியதாக, 30 டூவீலர்கள், நான்கு சக்கர வாகனங்கள் நான்கு பறிமுதல் செய்யப்பட்டது. மது, போதை பொருள் விற்றது தொடர்பாக ஒன்பது பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். வெள்ளோடு போலீஸ் ஸ்டேஷனில், சில மாதங்களுக்கு முன், போதை பொருட்கள் வழக்கில் சிக்கிய மூவர், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை