மேலும் செய்திகள்
வேனில் கடத்திய 1.2௫ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
15-Mar-2025
1.75 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைதுஈரோடு:ஈரோட்டை அடுத்த சூளை ரோஜா நகரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. குடிமைபொருள் பறக்கும் படை தாசில்தார் ஜெயக்குமார், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் எஸ்.ஐ., மேனகா ஆகியோர் தலைமையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். ஒரு சிறிய சரக்கு ஆட்டோவில், 35 மூட்டைகளில், 1,750 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. ஆட்டோவை ஓட்டி வந்த, கருங்கல்பாளையம், செங்குட்டுவன் வீதியை சேர்ந்த தினேஷ்குமாரிடம், 27, விசாரித்தனர். மக்களிடம் குறைந்த விலையில் வாங்கி, ஈரோடு பகுதியில் தங்கியுள்ள வடமாநில நபர்களுக்கு விற்பனை செய்ய கடத்தி செல்வதை ஒப்புக்கொண்டார். தினேஷ்குமாரை போலீசார் கைது செய்து, சரக்கு ஆட்டோவுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
15-Mar-2025