உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 1.8 டன் குட்கா பறிமுதல்

1.8 டன் குட்கா பறிமுதல்

அந்தியூர், அக். 15-அந்தியூர் போலீசார் நேற்று நள்ளிரவில், பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா பகுதியில், இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த ஒரு கண்டெய்னர் லாரியை நிறுத்த முயன்றனர். நிற்காமல் அத்தாணி சாலையை நோக்கி சென்றது. இதனால் விரட்டி சென்ற போலீசார், தோப்பூரில் சுற்றி வளைத்தனர். அப்போது டிரைவர், கிளீனர் தப்பி ஓடி விட்டனர். சோதனை செய்தபோது கண்டெய்னர் உள்பகுதியில் ரகசிய அறை இருந்தது. அதற்குள் ஹான்ஸ், குட்கா, பான்மாசாலா என, 10 லட்சம் மதிப்பில், 1.8 டன் புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது. கண்டெய்னர் லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பிய டிரைவர், கிளீனரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை