சரக்கு வாகனம் கவிழ்ந்து ௧9 தொழிலாளர் காயம்
பவானி: வெள்ளித்திருப்பூர் அருகே எண்ணமங்கலம், கோவிலுார், மலையனுார் பகுதிகளை சேர்ந்த, 20 கூலி தொழிலாளிகள், கரும்பு வெட்டும் பணிக்காக, அந்தியூர் அருகேயுள்ள கிருஷ்ணாரபுரத்துக்கு, ஒரு சரக்கு வேனில் நேற்று காலை, ௮:௦௦ மணிக்கு சென்றனர். டிரைவர் மோகன்ராஜ், 28, ஓட்டினார். எண்ணமங்கலத்தை அடுத்த ஆலயங்கரடு என்ற இடத்தில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, பக்கவாட்டில் உள்ள மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் அனைவரும் காயமடைந்து அலறினர். அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மூன்று பேர் அந்தியூர் தனியார் மருத்துவமனையிலும், 14 பேர் பெருந்துறை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். இரண்டு பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்