போதை பொருட்களுக்கு தடை கோரிய 2 பேர் கைது
போதை பொருட்களுக்கு தடை கோரிய 2 பேர் கைதுமொடக்குறிச்சி, டிச. 22-மக்களுக்காக போராடும் கட்சிக்கு ஆதரவு கோரி நடைபயணம் செல்லும், கட்சி ஒருங்கிணைப்பாளர்களான மதுரையை சேர்ந்த ஆனந்தன் மகள் நந்தினி, 31; குணா ஜோதிபாசு, 33, ஆகியோர், மொடக்குறிச்சி நால்ரோடு பகுதியில் நேற்று காலை பிரசாரத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் மது, கஞ்சா போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து வித போதை பொருட்களையும் தடை செய்ய வலியுறுத்தி, மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்க முற்பட்டனர். அவர்களை மொடக்குறிச்சி போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழக்குப்பதிந்து கைது செய்து மாலையில் விடுவித்தனர்.