மேலும் செய்திகள்
வேன் மோதி பெண் பலி
28-Oct-2025
கோபி, கோபி அருகே சிறுவலுாரை சேர்ந்தவர் முருகன், 55, விவசாயி; தனது உறவினரான பொலவக்காளிபாளையத்தை சேர்ந்த ரங்கநாயகியை, 72, ஹோண்டா சைன் பைக்கில் அழைத்து கொண்டு, ஒத்தக்குதிரை நால்ரோடு பஸ் நிறுத்தத்தை நேற்று காலை, 11:00 மணிக்கு கடக்க முயன்றார். அப்போது மாருதி சுசுகி சூப்பர் கேரியர் காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த வேன், பைக் மீது மோதியது. இதில் ரங்கநாயகி சம்பவ இடத்தில் பலியானார். பலத்த காயமடைந்த முருகன், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விபத்துக்கு காரணமான வேன் டிரைவர் சிறுவலுாரை சேர்ந்த மெய்யரசன், 20, என்பவரை பிடித்து கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Oct-2025