கார்-டிராவலர் வேன் மோதலில் 2 பேர் பலத்த காயம்
சத்தியமங்கலம்: திருப்பூர் மாவட்டம் பூதம்பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தன், 30; திருப்பூரில் இருந்து ஈரோடு மாவட்டம் தாளவாடிமலையில் உள்ள மாமியார் வீட்டுக்கு காரில் நேற்று காலை சென்றார்.அதேசமயம் மைசூருவில் இருந்து கோவைக்கு ஒரு டிராவலர் வேன் வந்தது. சூலுாரை சேர்ந்த விஜயகுமார் ஓட்டினார். செம்மண் திட்டு என்ற இடத்தில், எதிர்பாராதவிதமாக காரும், வேனும் மோதிக் கொண்டது. காரில் வந்த ஆனந்தன் உறவினர்க-ளான திருப்பூரை சேர்ந்த கருப்புசாமி, 23, அம்பிகா, 27, படுகாயம் அடைந்தனர். இருவரும் மீட்கப்பட்டு சத்தி அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்டனர்.