உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சேவல் சண்டை நடத்திய 2 பேர் சிக்கினர்

சேவல் சண்டை நடத்திய 2 பேர் சிக்கினர்

அந்தியூர்: வெள்ளித்திருப்பூர் அருகே, எண்ணமங்கலம் குட்டி தோட்டத்தை சேர்ந்த சிவகுமார் என்பவரது பாக்கு தோட்டத்தில், நேற்று சேவல் சண்டை நடப்பதாக எஸ்.ஐ., செல்வத்திற்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற எஸ்.ஐ.. மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார், சேவல் சண்டையில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்தனர். இதில், எண்ணமங்கலம் தெற்கு வீதியை சேர்ந்த பூபதி, 32; நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், சி.என். பாளையம் ராஜராஜன் நகரை சேர்ந்த வசந்தசுடர், 25; ஆகிய இருவர் சிக்கினர். எண்ணமங்கலம் குரும்பபாளையம்மேட்டை சேர்ந்த பாரதி, 29; என்பவர் தப்பியோடினார். இவர்களிடமிருந்து மூன்று சேவல்கள், ரொக்கமாக, 700 ரூபாயை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை