உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கண்டக்டர் உள்பட 2 பேர் ஈரோட்டில் கைது

கண்டக்டர் உள்பட 2 பேர் ஈரோட்டில் கைது

ஈரோடு, ஈரோட்டில் ஓடும் பஸ்சில், பள்ளி மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட, கண்டக்டர் உள்பட இருவரை, போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து பவானிக்கு, தனியார் டவுன் பஸ் (நெ.௫) நேற்று மாலை சென்றது. அசோகபுரம் பகுதிக்கு சென்ற போது, 16 வயது பள்ளி மாணவிகள் இருவர் ஏறினர்.சிறுமிகளிடம் நடத்துனர், அவருடன் இருந்த வாலிபர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள், சிறுமிகளின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இதை தொடர்ந்து ஈரோட்டை சேர்ந்த நடத்துனர் இளங்கோவன், 26; பவானியை சேர்ந்த இறைச்சி கடை தொழிலாளி நந்தகுமார், 26, ஆகியோர் மீது, போக்சோவில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி