சீருடையில் திரிந்த 2 மாணவியர் மீட்பு
சீருடையில் திரிந்த2 மாணவியர் மீட்புஈரோடு, நவ. 22-ஈரோட்டில் ஸ்வஸ்திக் ரவுண்டானா பகுதியில் நேற்று காலை, 10:20 மணியளவில் ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் கிரேடு-1 பெண் போலீஸ் தமிழ் செல்வி, போக்குவரத்து சீரமைப்பில் ஈடுபட்டிருந்தார். அப்பகுதியில் இரு சிறுமிகள் பள்ளி சீருடையுடன் சுற்றி கொண்டிருந்தனர். இருவரையும் அழைத்து விசாரித்தார். பள்ளிக்கு நேரமாகி விட்டது என்றும், உடல் நிலை சரியில்லை என்றும் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர்.ஒரு மாணவி ஒன்பதாம் வகுப்பு, மற்றொரு மாணவி பத்தாம் வகுப்பும், அரசு பள்ளியில் படிப்பதும், நசியனுாரை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது. ஈரோட்டுக்கு வந்ததற்கான காரணத்தை கேட்டபோது, சிறுமிகள் பதில் கூற வழியின்றி முழித்தனர்.ஈரோடு குழந்தைகள் நலக்குழுவினருக்கு '1098' என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கப்பட்டது. நலக்குழுவினர் விசாரணை நடத்தினர். பின் அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டனர்.