உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு பஸ் மோதி தொழிலாளி பலி ரகளை செய்த 2 வாலிபர்் கைது

அரசு பஸ் மோதி தொழிலாளி பலி ரகளை செய்த 2 வாலிபர்் கைது

ஈரோடு, நவ. 2-ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் இருந்து நேதாஜி சாலை வழியாக நேற்று முன்தினம் இரவில் அரசு பஸ் பஸ் ஸ்டாண்ட் நோக்கி சென்றது. அப்போது ரோட்டை கடக்க முயன்ற ஒருவர் மீது மோதி, வயிற்று பகுதியில் சக்கரம் ஏறி இறங்கியதில் அந்த நபர் இறந்தார். இதனால் அச்சம் அடைந்த அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் பஸ்ஸை ஓரமாக நிறுத்திவிட்டு சென்று விட்டனர்.விபத்து நடந்த இடம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்து வந்த, 2 வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்டனர். விபத்தை ஏற்படுத்தி அரசு பஸ் கண்ணாடியை கை மற்றும் கல்லால் தாக்கி உடைத்ததால் பரபரப்பானது. அப்போது மற்றொரு அரசு பஸ் அவ்வழியாக வந்தது. அந்த பஸ் டிரைவரையும் தாக்கினர். தகவலறிந்து ஈரோடு டவுன் போலீசார் வந்து விசாரித்தனர். விபத்தில் இறந்தவர் ஈரோடு, ராஜாஜிபுரத்தை சேர்ந்த தொழிலாளி அன்பு,40, என்பது தெரியவந்தது. குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டது, கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் வீதி சுபாஷ், 26, அரசிளங்கோ வீதி பூபதி, 32, என தெரியவந்தது. அன்புவின் உடலை மீட்ட போலீசார், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுபாஷ், பூபதியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !