உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இரண்டு பஸ்கள் மோதல் பயணிகள் 20 பேர் காயம்

இரண்டு பஸ்கள் மோதல் பயணிகள் 20 பேர் காயம்

பெருந்துறை: பெருந்துறை அருகே, இரண்டு பஸ்கள் மோதிய விபத்தில், 20க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயமடைந்தனர்.கோவையிலிருந்து நேற்று காலை அரசு பஸ், ஈரோடு வழியாக சேலம் சென்றது. அரசு பஸ்சை பவானியை சேர்ந்த கலையரசன், 44, ஓட்டி சென்றார். தனியார் பஸ் திருப்பூரில் இருந்து ஈரோடு சென்றது. தனியார் பஸ்சை சேலம் மாவட்டம், தாரமங்கலத்தை சேர்ந்த முருகன், 45, ஓட்டி சென்றார்.பெருந்துறை, வாய்க்கால் மேடு அருகே முன்னாள் சென்ற அரசு பஸ், திடீரென பிரேக் போட்டதால், தொடர்ந்து பின்னால் வந்த தனியார் பஸ், அரசு பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் இரண்டு பஸ்களிலும் பயணம் செய்த, 20க்கும் மேற்பட்ட பய-ணிகள் லேசான காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்-பட்டு, அருகிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் முதலுதவி சிகிச்சை பெற்று சென்றனர். பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி