மேலும் செய்திகள்
நீதிபதி முன் அநாகரிகம்; முதியவர் மீது வழக்கு
14-Oct-2025
தாராபுரம், தாராபுரத்தில் ஐகோர்ட் வக்கீல் படுகொலை வழக்கில் கைதான, 20 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.தாராபுரத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் முருகானந்தம், 41; சென்னை உயர்நீதிமன்றத்திலும் வாதாடி வந்தார். கடந்த ஜூலை, 28ல் தாராபுரத்தில் பட்டப்பகலில் தனியார் பள்ளி முன் கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனியார் பள்ளி தாளாளர் தண்டபாணி, அவரது மகன் கார்த்திகேயன் உள்பட, 20 பேரை, தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சில தினங்களுக்கு முன் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், 20 பேரையும் போலீசார் நேற்று ஆஜர் படுத்தினர். குற்றவியல் நடுவர் உமா மகேஸ்வரி விசாரணை செய்தார். இதை தொடர்ந்து, 20 பேரும் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.
14-Oct-2025