மேலும் செய்திகள்
30 கிராம பஞ்., செயலர்கள் பணியிட மாற்றம்
19-Feb-2026
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நம்பியூர், பவானிசாகர், அம்மாபேட்டை, பெருந்துறை, மொடக்குறிச்சி ஆகிய யூனியனில் உள்ள பஞ்.,க்கு உட்பட்ட, 21 குக்கிராமங்கள், அருகில் உள்ள பஞ்.,களில் இணைத்து மறுசீரமைப்பு செய்து ஆணையிடப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்ட அரசிதழில் கடந்த ஜன., 5ல் வெளியிடப்பட்டது. இதற்காக நடந்த கருத்து கேட்பு கூட்டங்களில், ஆட்சேபனை மனுக்கள் மீதும் கலெக்டர் பரிசீலனை செய்து, எவ்வித மாற்றமும் இன்றி பழைய நிலையில் தொடர உத்தரவிடப்பட்டுள்ளது.பவானிசாகர் யூனியனில் உள்ள பஞ்.,களில், குக்கிராமங்களை சில திருத்தங்களுடன் வெளியிடப்பட்டது. இதன்படி பவானிசாகர் தொப்பம்பாளையம் பஞ்.,ல் தொட்டம்பாளையம் இணைக்க இருந்து, முடக்கன்துறை பஞ்.,ல் இணைக்கப்பட்டுள்ளது. முடுக்கன்துறை பஞ்., பகுதிகள் அடுத்து வரும் சாதாரண தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.நம்பியூர் யூனியன் கெட்டிசெவியூர், தாழ்குனி பஞ்.,கள், அம்மாபேட்டை யூனியன் புதுார், சென்னம்பட்டி பஞ்.,கள், பெருந்துறை யூனியன் சீனாபுரம், செல்லப்பம்பாளையம் பஞ்.,கள் மொடக்குறிச்சி யூனியன் முகாசி அனுமன்பள்ளி, அட்டவணை அனுமன்பள்ளி பஞ்.,கள், அரசாணைக்கு முன்பு இருந்த பழைய நிலையே எவ்வித மாற்றம் இன்றி தொடரும்.மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்ட நாள் முதல், இந்த மாற்ற அறிவிக்கைகள் அமலுக்கு வருகிறது என, கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
19-Feb-2026