ஈரோட்டில் போகி தினத்தில் 215 டன் குப்பை சேகரிப்பு
ஈரோடு: ஈரோடு மாநகரில் போகி தினத்தன்று மொத்தம், 215 டன் குப்பை சேகரிக்கப்பட்டதாக மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.பொங்கல் கொண்டாட்டத்தின் துவக்கமாக போகி கடந்த, 13ல் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் வீடு, அலுவலகம், கடைகளில் இருந்த பழைய பொருட்களை குப்பையில் வீசி எறிவது வழக்கம். அதுபோல் இந்தாண்டு போகி தினத்தன்று மட்டும், 215 டன் குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது.இதுபற்றி மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது: வழக்கமாக, 190 டன் குப்பை தினமும் சேகரிக்கப்படுகிறது. இதனுடன் சேர்த்து போகி தினத்தில் கூடுதலாக மாநகராட்சிக்கு உட்பட்ட, 60 வார்டுகளிலும் மொத்தம், 25 டன் குப்பை மாநகராட்சி துாய்மை பணியாளர்களால் சேகரிக்கப்பட்டுள்ளது. அதாவது மொத்தம், 215 டன் குப்பை ஒரே நாளில் சேகரிக்கப்பட்டு, குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியே பிரித்து எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.