மேலும் செய்திகள்
ஈரோடு - செங்கோட்டை ரயில் இயக்கம் மாற்றம்
11-Apr-2025
ஈரோடு:வக்ப் வாரிய சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி, தமிழ் புலிகள் கட்சியினர், ஈரோட்டில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதனால் நேற்று ஈரோடு ரயில்வே ஸ்டேஷனின் இரு நுழைவு வாயில்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அக்கட்சி மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையிலான கட்சியினர், காளை மாட்டு சிலை சந்திப்பு அருகே திரண்டனர். அங்கிருந்து ரயில்வே ஸ்டேஷன் நோக்கி ஊர்வலமாக வந்தனர். நுழைவு வாயில் அருகே பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் பேரிகார்டு கொண்டு தடுக்க முயன்றனர். அவர்களோ பேரிகார்டுகளை துாக்கி எறிந்தும், போலீசாரை தள்ளியும் ஸ்டேஷன் டிக்கெட் கவுன்டர் வரை சென்றனர். அங்கு போலீசார் தடுத்ததால் தரையில் அமர்ந்து போராட்டத்தில், 10 நிமிடம் ஈடுபட்டனர். ரயில் மறியலில் ஈடுபட முயன்ற நாகை திருவள்ளுவன், மத்திய மாவட்ட தலைவர் சிந்தனை செல்வன் உட்பட, 230 பேரை கைது செய்த போலீசார், வாகனங்களில் ஏற்றிச்சென்று திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
11-Apr-2025