மேலும் செய்திகள்
அரசு அலுவலகங்களில் துாய்மை இயக்கம் துவக்கம்
06-Jun-2025
ஈரோடு, 'துாய்மை இயக்கம்' மூலம், ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை அலுவலகங்களில் நேற்று முன்தினம் துாய்மை பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் மாவட்ட அளவில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 14 யூனியன், 42 டவுன் பஞ்.,களில் துாய்மை பணி நடந்தது. இதில் தேவையற்ற, கிடப்பில் வைத்துள்ள பயனற்ற காகிதங்கள், உறை, அட்டை, நெகிழி, இரும்பு பொருட்கள், மின்னணு சாதனங்கள், கட்டுமான கழிவு, பயன்படுத்த இயலாத சுகாதாரம் தொடர்பான பொருட்கள், தேவையற்ற, உடைந்த, பயனற்ற மரப்பொருட்கள் என, 24,428 கிலோ கழிவு பொருட்கள் மாவட்ட அளவில் அகற்றப்பட்டதாக தெரிவித்தனர்.
06-Jun-2025