2,500 டன் பச்சரிசி வருகை
ஈரோடு:தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தில் ரேஷன்கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்ய, நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், தெலுங்கானா மாநிலம் சனத் நகரில் பச்சரிசி கொள்முதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, 2,500 டன் பச்சரிசி, தனி சரக்கு ரயிலில் ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டுக்கு நேற்று வந்தது. சுமை துாக்கும் தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி ஈரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர்.