உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 2ம் பருவ பாடப்புத்தகம் வருகை

2ம் பருவ பாடப்புத்தகம் வருகை

ஈரோடு தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், காலாண்டு தேர்வு நேற்று தொடங்கியது. வரும், 26ல் நிறைவடைகிறது. அக்.,3ல் இரண்டாம் பருவம் துவங்குகிறது. இந்நிலையில் இரண்டாம் பருவ பாடப்புத்தகம் ஈரோட்டுக்கு வந்துள்ளது.இதுகுறித்து கல்வி துறையினர் கூறியதாவது: ஆறாம் வகுப்பில், 11,738 பேருக்கும், ஏழாம் வகுப்புக்கு, 11,739 பேருக்கும் புத்தகம் வழங்கப்படும். இதில்லாமல் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, 50,238 ஆங்கில பாட நோட்டு வந்துள்ளது. பிற பாடங்களுக்காக, இரண்டு லட்சம் நோட்டு வர வேண்டியுள்ளது. பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்குவதற்குள் நோட்டு வந்து விடும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை