உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கஞ்சா கடத்திய 3 பேர் கைது

கஞ்சா கடத்திய 3 பேர் கைது

பவானிசாகர்:பவானிசாகரை அடுத்த முடுக்கன்துறை சந்தையில், பவானிசாகர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் வந்த நான்கு பேரிடம் சோதனை செய்தனர். பைக்கில் முக்கால் கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் முகிலன், 45; சத்தியமங்கலம் ராதாகிருஷ்ணன், 35, ருத்ரகுமார், 23, மற்றும் 17 வயது வாலிபர் என்பது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து நான்கு பேரையும் கைது செய்தனர். இதில் மைனர் வாலிபர், கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.* சென்னிமலை போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்படி திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ரோடு கணுவாயில் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் பீஹார் மாநிலத்தை சேர்ந்த, 39 வயது ஆசாமி வந்தார். அவரிடம், 1,200 கிராம் கஞ்சா இருந்தது. அவரை கைது செய்து, பைக்குடன் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ