ஆடு திருடிய 3 பேர் கைது
சென்னிமலை:சென்னிமலையை அடுத்த ஒரத்துப்பாளையம், சரளை மேட்டை சேர்ந்தவர் சசிகுமார், 42; இவருக்குச் சொந்தமான இரண்டு வெள்ளாடுகள் நேற்று முன்தினம் இரவு காணாமல் போயின.சசிகுமார் விசாரித்தபோது மூன்று பேர் புளூ கலர் ஸ்கூட்டியில் வைத்து கடத்திச் செல்வதாக தகவல் கிடைத்தது. சென்னிமலை போலீசில் உடனடியாக புகார் அளித்தார். போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, புளூ ஸ்கூட்டியில் வந்த மூவர் சிக்கினர்.விசாரணையில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தேனீஸ்வரன்பாளையத்தை சேர்ந்த பரணி 25; ரகுபதி, 27; மற்றும் கோவிந்தசாமி, 20; என்பது தெரிந்தது. சசிகுமாரின் ஆடுகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். மூவரை கைது செய்த போலீசார், மொபட்டை பறிமுதல் செய்தனர்.