உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெவ்வேறு சம்பவங்களில் கைம்பெண் உள்பட 3 பேர் சாவு

வெவ்வேறு சம்பவங்களில் கைம்பெண் உள்பட 3 பேர் சாவு

ஈரோடு :வெவ்வேறு சம்பவங்களில் ஈரோடு மற்றும் அரச்சலுாரைச் சேர்ந்த ௨ கைம்பெண்கள் உள்பட ௩ பேர் இறந்தனர்.ஈரோடு, கொல்லம்பாளையம், லோகநாதபுரம், கே.டி.கே.தங்கமணி வீதியை சேர்ந்த மூர்த்தி மனைவி ஆனந்தி, 39; ஆறு ஆண்டுக்கு முன் கணவர் இறந்துவிட்டார். ஆனந்திக்கு சொரியாசிஸ் நோய் அதிகமாக இருந்ததால், குடி பழக்கத்துக்கு ஆளானார். சகோதரி பவித்ரா வீட்டில் சில ஆண்டாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் மயங்கிய நிலையில் இருந்த ஆனந்தியை, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவ பரிசோதனையில் இறந்து விட்டது தெரிய வந்தது. சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.* அரச்சலுார் பூந்துறை சேமூர் புதுகாலனியை சேர்ந்தவர் அம்மாசை. இவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர். கடைசி மகளான சொர்ணாயாளுக்கு, ஜேடர்பாளையத்தை சேர்ந்த சிவசங்கருடன் திருமணம் நடந்தது. இரண்டு மாதத்துக்கு முன் கணவர் இறந்து விட்டதால் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். மனநிலை பாதித்த நிலையில் இருந்தார். நேற்று முன்தினம் வீட்டு பின்புற சிமென்ட் செட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி