உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குரூப்-4 தேர்வில் 34,276 பேர் பங்கேற்பு 6,960 விண்ணப்பதாரர் புறக்கணிப்பு

குரூப்-4 தேர்வில் 34,276 பேர் பங்கேற்பு 6,960 விண்ணப்பதாரர் புறக்கணிப்பு

ஈரோடு :தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-௪ தேர்வு நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில், 142 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வெழுத, 41,236 பேர் விண்ணப்பித்து நுழைவு சீட்டு பெற்ற நிலையில், 34,276 பேரே (83 சதவீதம்) பங்கேற்றனர். 6,960 பேர் (17 சதவீதம்) வரவில்லை. தேர்வை கண்காணிக்க பறக்கும் படை அலுவலர், நடமாடும் குழு அமைக்கப்பட்டது. 149 வீடியோகிராபர்கள் பணியில் ஈடுபட்டனர். அந்தியூர் தாலுகா நெரிஞ்சிபேட்டை சரவணா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அ.செம்புளிச்சாம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஈரோடு சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையங்களில் நடந்த தேர்வை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார். திண்டல் வேளாளர் கலை அறிவியல் கல்லுாரி, கீதாஞ்சலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மையங்களில், டி.ஆர்.ஓ., சு.சாந்தகுமார் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ