உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நடைபயிற்சி சென்றபோது கார் மோதி 4 பேர் காயம்

நடைபயிற்சி சென்றபோது கார் மோதி 4 பேர் காயம்

பவானி, சித்தோடு அருகே பெருமாபாளையத்தை சேர்ந்தவர்கள் சுமதி, 51, சரோஜினி, 60, சக்தி, 45, ஆறுமுகம், 71; இவர்கள் நான்கு பேரும் நேற்று காலை, 6:30 மணியளவில், ஈரோடு - கோபி சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஈரோட்டில் இருந்து கோபி நோக்கி வந்த நெக்சான் கார், இவர்கள் மீது மோதியது. பலத்த காயமடைந்த நான்கு பேரும், பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.காரை ஓட்டி வந்தது, ஈரோட்டை சேர்ந்த தினா, 42, என்பது தெரிய வந்தது. புகாரின்படி சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ