409 பேர் மாயம் 381 பேர் மீட்பு
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆக., இறுதி வரை சிறுவர், சிறுமியர், பெண்கள் என, 409 பேர் மாயமாகியுள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு ஆக., மாதம் வரை, 284 பெண்கள், 110 சிறுமிகள், 14 சிறுவர்கள், மூன்றாம் பாலித்தனர் ஒருவர் என, 409 பேர் காணாமல் போனதாக, போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், 12 சிறுவர்கள், 108 சிறுமியர், 260 பெண்கள், மூன்றாம் பாலித்தனர் ஒருவர் என, 381 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சிறுவர், சிறுமியர் தலா இருவர், 24 பெண்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.