திறனறி தேர்வெழுதிய 4,628 மாணவர்
ஈரோடு: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாண-வ--மாணவிகளுக்கு, முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில், 20 மையங்களில், 4,806 மாணவ--மாணவியர் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டி-ருந்தது. முதல் தாள், இரண்டாம் தாள் என, காலை மற்றும் மாலையில் தேர்வு நடந்தது. தேர்வில், 4,628 பேர் பங்கேற்றனர். 178 பேர் புறக்கணித்து விட்டனர். தேர்வில் மாநில அளவில் முதல் ஆயிரம் இடம் பிடிப்பவர்களுக்கு, பிளஸ் 2 முடிக்கும் வரை, மாதந்தோறும், ௧,௦௦௦ ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்-கப்படும்.