உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காஞ்சிகோவிலில் 4ல் சைக்கிள் போட்டி

காஞ்சிகோவிலில் 4ல் சைக்கிள் போட்டி

ஈரோடு, ஜன. 1-முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை ஒட்டி, 2024-25ம் ஆண்டு மிதிவண்டி போட்டி, வரும், 4ல் காஞ்சிக்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி பெருந்துறை சாலை சென்று மீண்டும் பள்ளியில் நிறைவு பெறுகிறது. மூன்று பிரிவாக போட்டி நடத்தப்படுகிறது.போட்டியில் பங்கேற்க இந்திய தயாரிப்பு மிதிவண்டிகளையே பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பெறுபவர்களுக்கு, 5,000 ரூபாய், இரண்டாமிடத்துக்கு, 3,000 ரூபாய், மூன்றாமிடத்துக்கு, 2,000 ரூபாய் பரிசாக வழங்கப்படும். 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு, 250 ரூபாய் பரிசு, தகுதி சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் மாணவ--மாணவிகள் தன் சொந்த சைக்கிள், தலைகவசத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.விபரங்களுக்கு ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலரின் மொபைல் எண், 74017-03490ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி